நண்பனே






















உயிர் கொடுக்க
நான் இருக்கிறேன்
உறவாக நீ இருந்தால்

நண்பனே
கருவறைதானே வேறு நமக்கு

பள்ளி பருவத்தில்
அழகான நம் நட்பு-இனி
கல்லறையில்தான் முடியும்

என்னை எனக்கே
காட்டும் காலக்கண்ணாடி
நம் நட்பின் முகவரி

நாம் செய்த
சின்ன சின்ன குறும்புகள்
சிறகடித்து பறக்கின்றன

ஆலமரமாய்
வாழமரமாய்

வேர்விட்டு
தலைமுறை தலைமுறையாய்
வாழும் வளரும்
நம் நட்பு

Comments

Popular Posts