Friday, August 23, 2013

ரசம் முட்டை ஆம்லேட்












தேவையான பொருட்கள்





வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு













சீரகம்,பூண்டு,மிளகு











நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.












இவற்றுடன் முட்டை சேர்த்து கலக்க வேண்டும்










முட்டை கலவையுடன் அரைத்த பூண்டு,சீரகம்,மிளகு பொடி,சேர்த்து கலக்க வேண்டும்.








செய்முறை




அதிக நேரம் வைத்திருக்க கூடாது வெங்காயத்தில் உள்ள நீர் கசிந்து விடும்









தோசை கல்லில் எண்ணெய் தடவி முட்டைகலவையை
தோசை மாதிரி ஊற்றி வேகவைக்க வேண்டும்.











ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் மாற்றி போட்டு நன்கு வேகவைக்க வேண்டும்











சுவையான ரசம் ஆம்லேட் ரெடி!


























முட்டை ஆம்லேட்











தேவையான பொருட்கள்





வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு.மிளகு பொடி.










அத்துடன் முட்டை சேர்த்து நன்கு கலக்கி வைத்து கொள்ள வேண்டும்.அதிகநேரம் வைத்திருக்க கூடாது வெங்காயத்தில் உள்ள நீர் கசிந்து விடும்.








செய்முறை






தோசை கல்லில் எண்ணெய் தடவி முட்டை கலவையை தோசை மாதிரி ஊற்றி வேண்டும்.










ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் மாற்றி போட்டு நன்கு வேகவைக்க வேண்டும்.











சுவையான முட்டை ஆம்லேட் ரெடி!

Thursday, August 22, 2013

என் கணவன்
















என் பெண்மையை களவாடிய
கள்வன் நீ
என் கணவனும்  நீயே

புல்லொன்று நுழைய வழியில்லை
என் இதயத்தில்
புயலென வந்த புதிர் நீ
என் புருசனும் நீயே

மணவறையில்
உன் விரல் பிடித்த அன்பும் அரவணைப்பும்
நாட்கள் கடந்தும்
வருடங்கள் கடந்தும்
இன்றும் உணர்கிறேன்
என் அன்பானவனே

உதடுகள் சொல்ல
நினைப்பதை எல்லாம்
சொல்ல முடியவில்லை
என்னுள் இருக்கும் உன்னை
என் காதலனே

நரை விழுந்தாலும்
என் இரத்த செல்கள் செயலிழந்தாலும்
உன் பெயரை சொல்வேன்
என் கடைசி மூச்சி வரை
என் உயிரானவனே

நாள்தோறும்
நாம் செய்யும் சேட்டைகளையும்
காதல் நினைவுகளையும்
உயிரெல்லாம் பொறித்துவைத்திருக்கிறேன்

என்னுள் உன்னை விதைத்தாயே
மரமானேன்
உன் நினைவில்
காலமெல்லாம் காத்து நிற்பேன்
நீ இருக்கும் வரையில்

நீ இல்லாத இவ்வுலகில்
அர்த்தமில்லாமல் போகும்
நானும்  இல்லை
என் கணவனே
என் உயிரானவன்
உன்னை காதலிக்கிறேன்
















உளுந்த வடை











தேவையான பொருட்கள்




உளுத்தம் பருப்பு,பச்சரிசி,வெந்தயம் தண்ணீரில் ஒரு
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.











வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பொடியாக நறுக்கியது.











செய்முறை






உளுத்தம் பருப்பு ஊறியதும் தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு அரைக்கவேண்டும்.












கிரைண்டரில் அரைப்பது நல்லது.வடையும் சுவையாக இருக்கும்.










அரைத்த மாவில் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,மிளகு பொடி,கருவேப்பிலை சேர்த்து கிளற வேண்டும்.






கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மாவை உருண்டையாக உருட்டி பின்பு அதை தட்டி நடுவில் ஓட்டை போட்டு வடையை ஒன்றன் பின் ஒன்றாக போடா வேண்டும்.









ஒருபுறம் வடை வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போட வேண்டும்.










சுவையான வடை ரெடி!

Wednesday, August 21, 2013

ருசியான சாம்பார்















தேவையான பொருட்கள்




சாம்பார் வெங்காயம்,முருங்கக்காய்,கேரட்,கத்தரிக்காய்
,தக்காளி,பச்சை மிளகாய்,இவற்றுடன் அவரைக்காய்,முள்ளங்கி கூட சேர்க்கலாம்.











புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்










தொரம்பருப்பை மஞ்சள்,பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துகொள்ளவேண்டும்










செய்முறை





பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கக்காய்,கேரட்,கத்தரிக்காய் ,சாம்பார் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.





காய்கறி எல்லாம் வெந்ததும் புளிகரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதில் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.








மசாலா  வாடை போனதும் அத்துடன் உப்பு வேக வைத்த  பருப்பை சேர்த்து மீண்டும் கொதிக்க  வைக்க வேண்டும்.









தனியாக கடாயில் நல்லெணெய்,நெய் ஊற்றி அதில் கடுகு ,கருவேப்பிலை போட்டு  பொரிந்ததும் அவற்றை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும்.







சுவையான சாம்பார் ரெடி
கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.





கொத்தவரங்காய் பொரியல்











தேவையான பொருட்கள்


கொத்தவரங்காய்யை சிறு சிறு துண்டுகளாக
வெட்டி வைத்துகொள்ளவேண்டும்.




வெங்காயம்,மஞ்சள்,மிளகாய் பொடி, கருவேப்பிலை,கொத்தமல்லி இலை.







செய்முறை





பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொத்தவரங்காயை போட்டு முக்கால் பாகம் வேக வைக்க வேண்டும்.








முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.








பாத்திரத்தில் நல்லெணெய் ஊற்றி அதில் கடுகு,உளுத்தம் பருப்பு ,கருவேப்பிலைபோட்டு பொரிந்ததும்






வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.








அத்துடன் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,சேர்த்து வதக்கவும்.









கொத்தவரிகாய் சேர்த்து வேகவைக்கவும்.










சுவையான கொத்தவரிகாய் பொரியல் ரெடி!

Tuesday, August 20, 2013

கொத்தமல்லி சட்னி












தேவையான பொருட்கள்






கொத்தமல்லி இலை,உளுத்தம் பருப்பு












தேங்காய்,பச்சைமிளகாய்,புளி,பூண்டு
சிறிது பொட்டுகடலை,உப்பு








கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக  வதக்க வேண்டும்.










இத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.








தேங்காய்,புளி,பூண்டு,பொட்டுகடலை,உப்பு,வதக்கிய கொத்தமல்லி இலை,உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.








கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை பொரிந்ததும் சட்னியில் சேர்க்கவும்.










சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!