ருசியான மீன் குழம்பு


தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ கிராம்
நல்லெண்ணெய் – 50 மில்லி.
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி  150 கிராம்
புளி கரைக்க தண்ணீர் 
பச்சை மிளகாய் – 3
மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
மல்லிப்போடி – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
சிறிதளவு மல்லி
கறிவேப்பிலை இலைகள்
செய்முறை 
         *மீனை நன்றாக தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 
      *மீன்  வாடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் கழுவுவதற்கு முன் மீனில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கழுவினால் வாடை குறைந்துவிடும்.
        *புளியை நன்றாக ஊறவைத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்
        *சிறிது மல்லி இலையையும் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்..
    *வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து கரகரப்பான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
   
        * கழுவிய மீனை  தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
       *அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடேறியவுடன் வெந்தயம் தாளித்து ,பச்சை மிளகாய்  கறிவேப்பிலை, , மல்லி இலை போட்டு வதக்கவேண்டும் .பிறகு மீதமுள்ள  வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி மிளகாய்ப் பொடி ,மல்லி பொடி ,சீரக பொடி,உப்பு  ,மஞ்சள் சேர்த்து எண்ணெய் மிதக்கும் அளவு  நன்கு வதக்கவும் 
       *புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பின் தணலை மிதமாக்கவும்.பதினைந்து நிமிடம் மிதமாக தீயில் வைத்து பச்சை மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.பின் எண்ணெய் மிதந்து வரும் நேரத்தில் மீன் சேர்த்து வேக வைக்கவேண்டும்   
      *அதிக நேரம் வேக வைத்தால் மீன் துண்டுகள் உடைந்து விடும்.
     *மீன் துண்டுகள் உடையும் முன் இறக்கவும் 
     *சுவையான மீன் குழம்பு ரெடி 

Comments

Popular Posts