ஆசை

















இன்னும் நினைக்க ஆசை
சிறு வயதில் புத்தகத்தில் வைத்த
மயில் இறகு குட்டி போடவில்லை என்று
அழுத ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை


பள்ளி செல்லும் போது
பூ வைக்க வேண்டும் என்று
அடம்பிடித்த ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை


தம்பி புத்தகத்தை கிழித்தவுடன்
அம்மா அடித்த ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை


அப்பா அம்மாவை அடித்தவுடன்
நானும் அழுத ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை


நான் நாடக மேடையில்
நன்றாக நடித்தேன் என்று
ஆசிரியர் பாராட்டிய ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை


எதிர்காலத்தில் நானும் ஆசிரியராவேன்
என்று கூறிய ஞாபகம்
இன்னும் நினைக்க ஆசை

Comments

Popular Posts