களவு






















களவு கொடுத்த நான்
காவல் நிலையம்
சென்று புகார் கொடுத்தேன்
ஏற்க மறுத்தவர்கள் --என்னை

மனநல மருதுவரிடம்
அழைத்து சென்றார்கள்


எப்படி சொல்வேன்
என் இதயத்தை
அவளிடம் தொலைத்தேன் என்று

களவாடிய அவளை
கைதி செய்யுங்கள்  என்று
எவ்வளவு சொல்லியும்
நம்ப மறுக்கிறார்கள்

அவளை  இவர்கள்
ஒரு முறை பார்த்தால் போதும்...........
உடனே இவர்கள்
மனநல மருத்துவரிடம்
அழைத்து செல்லப்படுவார்கள்

களவு கொடுத்த எனக்குதானே
தெரியும் அவளை பத்தி


வேறு ஒரு  காவல் நிலையம் செல்வதா ?- இல்லை
அவள் இதயம் களவுகொள்ள
பயிலவேண்டுமா  ?
களவுபாடம் ...........

Comments

Popular Posts