தற்கொலை முயற்சி




















மரணதாயின் கருவறையில்
கலைக்கப்பட்டவர்களே

யாருமே இல்லை என
  உன்னை நீயே
கொலை செய்யாதே

உனக்காக வாழும்
உயிர்களும் உண்டு
மரமாகச்
செடியாக
பூவாக காயாக-ஏன்
விலங்குகளாக கூட இருக்கலாம் .....

உன்னை நேசி
உன்னை சுற்றிய
இயற்கையை நேசி

மொழியில்லா உறவுகள் ஏராளம்
கவிதையை நேசி
ஓவியத்தை நேசி
குழந்தையை நேசி
பொம்மைகளை நேசி

உணர்வுள்ள  உறவுகளும் உண்டு
மழையில் நனை
தென்றலோடு  விளையாடு
நெருப்பில் குளிர்காய்
நிலவை ரசி
பின்பு வாழ மட்டுமே பிடிக்கும்
உன் மறுவாழ்விற்கு
வாழ்த்துக்கள் ...............

தற்கொலை செய்ய துணியும்
 நண்பர்களே
கலங்கவும் வேண்டாம்
கவலைப்படவும் வேண்டாம்
வாழ்ந்துபார் வாழ்க்கை புரியும்



Comments

Popular Posts