மலடி

















மலடியின்
ஆனந்த கண்ணீர்
கனவாக இருந்த
நாட்கள் நினைவதால்.....


கருவறையில் நீ இல்லை என்றால்
கள்ளிபால் குடித்து  கல்லறைக்கு
சென்றிருப்பேன்

உன்கால்கள் என்
மடி தொட

மழலை பேச்சி
காதில் விழ

உன் பிஞ்சி விரல்கள்
என் கன்னம் வருட

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காத்திருந்தேன் ......
இப்போதாவது வந்தாயே
என் துயர் துடைக்க


நீ மலடி நீ மலடி .....
இந்த சொல்லை கேட்கும்
போதெல்லாம்
என் உயிர்
அணு அணுவாய்
துடிக்கும்

என்ன தவம் செய்தேனோ
என் செல்லமே நீ
அம்மா என்று அழைக்க................

அம்மா அம்மா  சொல்
அ.... ம்....மா......
ஒரே ஒருமுறை
சொல் அம்மா
நான் மலடி அல்ல
நான் மலடி அல்ல
அம்மா நான் அம்மா............




Comments

Popular Posts