என் கணவன்
















என் பெண்மையை களவாடிய
கள்வன் நீ
என் கணவனும்  நீயே

புல்லொன்று நுழைய வழியில்லை
என் இதயத்தில்
புயலென வந்த புதிர் நீ
என் புருசனும் நீயே

மணவறையில்
உன் விரல் பிடித்த அன்பும் அரவணைப்பும்
நாட்கள் கடந்தும்
வருடங்கள் கடந்தும்
இன்றும் உணர்கிறேன்
என் அன்பானவனே

உதடுகள் சொல்ல
நினைப்பதை எல்லாம்
சொல்ல முடியவில்லை
என்னுள் இருக்கும் உன்னை
என் காதலனே

நரை விழுந்தாலும்
என் இரத்த செல்கள் செயலிழந்தாலும்
உன் பெயரை சொல்வேன்
என் கடைசி மூச்சி வரை
என் உயிரானவனே

நாள்தோறும்
நாம் செய்யும் சேட்டைகளையும்
காதல் நினைவுகளையும்
உயிரெல்லாம் பொறித்துவைத்திருக்கிறேன்

என்னுள் உன்னை விதைத்தாயே
மரமானேன்
உன் நினைவில்
காலமெல்லாம் காத்து நிற்பேன்
நீ இருக்கும் வரையில்

நீ இல்லாத இவ்வுலகில்
அர்த்தமில்லாமல் போகும்
நானும்  இல்லை
என் கணவனே
என் உயிரானவன்
உன்னை காதலிக்கிறேன்
















Comments

Popular Posts