செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் 



வெங்காயம்,தக்காளி ,பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கவும்
பிரியாணி இலை,எலுமிச்சை ,கிராம்பு,தயிர்



                                                       
                                                               


 இஞ்சி பூண்டு விழுது







                                                 





சிக்கன் அரை கிலோ நன்கு சுத்தம் சேர்த்து மஞ்சள் எலுமிச்சை சாறு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்






கொத்தமல்லி ,புதினா ,சாம்பார் வெங்காயம் ,பட்டை கிராம்பு,லவங்கம் எல்லாவற்றையும் அரைத்து எடுக்கவும்






பாசுமதி அரசி சிறிது எண்ணெய் கலந்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
அரிசி ஊறியதும் கடாயில் நெய் ஊற்றி சிறிது வதக்கி எடுத்துகொள்ள வேண்டும்


செய்முறை 

                 





குக்கரில் நெய் ,எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் கிராம்பு ,பிரியாணி இலை பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்









அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்









பின்பு சிக்கன் சேர்த்து கிளறிஅத்துடன்தயிர்,மிளகாய்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்







சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கவும் பின்பு வெந்நீரை அரிசியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்









தண்ணீர் கொதித்ததும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி குக்கரில் இரண்டு விசில் சேர்த்து வேகவைக்கவும்














சுவையான பிரியாணி ரெடி !

Comments

Popular Posts