ருசியான சாம்பார்
தேவையான பொருட்கள்
சாம்பார் வெங்காயம்,முருங்கக்காய்,கேரட்,கத்தரிக்காய்
,தக்காளி,பச்சை மிளகாய்,இவற்றுடன் அவரைக்காய்,முள்ளங்கி கூட சேர்க்கலாம்.
புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
தொரம்பருப்பை மஞ்சள்,பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துகொள்ளவேண்டும்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கக்காய்,கேரட்,கத்தரிக்காய் ,சாம்பார் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய்கறி எல்லாம் வெந்ததும் புளிகரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதில் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
மசாலா வாடை போனதும் அத்துடன் உப்பு வேக வைத்த பருப்பை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
தனியாக கடாயில் நல்லெணெய்,நெய் ஊற்றி அதில் கடுகு ,கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் அவற்றை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும்.
சுவையான சாம்பார் ரெடி
கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Comments
Post a Comment