சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்
சாம்பார் வெங்காயம்,தக்காளி,இவற்றை நீளவாக்கில்
நறுக்க வேண்டும்.இஞ்சி பூண்டு விழுது,கொத்த மல்லி இலை.
கொத்த மல்லி பொடி,சீரக பொடி,மிளகு பொடி,கருவேப்பிலை ,மிளகாய் பொடி,பட்டை, கிராம்பு,ஏலகாய் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்துகொள்ள வேண்டும்
அவற்றில் மஞ்சள், எலும்மிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
பாத்திரத்தில் நல்லெணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலைபோட்டு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பொன்னிறமாக வதக்கியதும் இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இவற்றில் தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது அவற்றுடன் உப்பு,மல்லி பொடி,மிளகாய் பொடி,மிளகு பொடி,சீரக பொடி,சக்தி சிக்கன் மசாலா பொடி,சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சிக்கன் சேர்த்து நன்கு எண்ணெய் பிரித்து வரும் வரை வதக்க வேண்டும்.
இவற்றில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிக்கன் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.கடைசியில் பொத்த மல்லி இலை தூவி இறக்க வேண்டும்.சுவையான சிக்கன் குழம்பு ரெடி!
Comments
Post a Comment