கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை,உளுத்தம் பருப்பு
தேங்காய்,பச்சைமிளகாய்,புளி,பூண்டு
சிறிது பொட்டுகடலை,உப்பு
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
தேங்காய்,புளி,பூண்டு,பொட்டுகடலை,உப்பு,வதக்கிய கொத்தமல்லி இலை,உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை பொரிந்ததும் சட்னியில் சேர்க்கவும்.
சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!
Comments
Post a Comment