வெங்காய பூண்டு குழம்பு











தேவையான பொருட்கள்



சின்ன வெங்காயம்,பூண்டு ,தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி  இலை,மஞ்சள்,வத்த பொடி ,மல்லி பொடி தேங்காய்,புளிகரைசல்சீரக பொடி,மிளகு பொடி .








செய்முறை





பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.












வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.










தக்காளி வதக்கியதும் மஞ்சள்,மிளகு பொடி,வத்த பொடி மல்லி பொடி சீரக பொடி சேர்த்து வதக்க வேண்டும்.











இத்துடன் புளிகரைசல் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.








எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லி இலை தூவி
இறக்கவும்.சுவையான வெங்காய பூண்டு குழம்பு ரெடி.











Comments

Popular Posts