குருமா











தேவையான பொருட்கள்




வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,கருவேப்பிலை ,
கொத்தமல்லி, உருளைக்கிழங்கு,சீரக பொடி,மல்லி பொடி.











கேரட்,பச்சைபட்டாணி,தேங்காய்,கசகசா,பட்டை ,கிராம்பு









செய்முறை




பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்







வெங்காயம் சேர்த்து வதக்கவும்.










வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.












இத்துடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.











இத்துடன் பச்சைபட்டாணி,கேரட் சேர்த்து வதக்க வேண்டும்.










மல்லி பொடி,சீரக பொடி,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்க வேண்டும்.









தேங்காய்,கசகசா,பட்டை,கிராம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.












தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.










எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Comments

Popular Posts