சுண்டவத்தல் குழம்பு


தேவையான பொருட்கள்



வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி,கருவேப்பிலை
கடுகு,புளிகரைசல்.










எண்ணெயில் வதக்கிய சுண்ட வத்தல்,பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பூண்டு,கொஞ்சம் தேங்காய்  சேர்த்து வதக்கி அதனை அரைத்து வைத்த விழுது.








செய்முறை




பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.












வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்க வேண்டும்.










அரைத்த விழுதையும், சுண்ட வத்தலையும் சேர்த்து வதக்க வேண்டும் பின்பு கொத்தமல்லி பொடி,சீரக பொடி,வத்த பொடி சேர்த்து வதக்க வேண்டும்.










இத்துடன் புளி கரைசலை சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதித்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான சுண்ட வத்தல் குழம்பு ரெடி.

Comments

Popular Posts