Chicken Pizza













தேவையான பொருட்கள்




சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,
குடைமிளகாய்,சிக்கன்,ஆலிவ் எண்ணெய் .












பிரெட் மாவு,ஈஸ்ட் ,உப்பு,தண்ணீர் .









செய்முறை





இரண்டு கப் பிரெட் மாவு கொஞ்சம் உப்பு அரை டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.








கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.








சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி மாவை உருண்டையாக உருட்டு அதை காற்று புகாதவாறு பிளாஸ்டி கவர் போட்டு மூடி வைக்க வேண்டும்.







மாவு குறைந்தது 12 முதல் 18மணிநேரம் ஊற வேண்டும்.இப்படி உப்பி வரும்.








குடை மிளகாய் ,வெங்காயத்தை Microwave oven ல  ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.தண்ணீர் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.








சிக்கனையும் ஒரு நிமிடம் Microwave ovenல வைத்து எடுக்க வேண்டும்.









Pizza Pan ல ஆலிவ் எண்ணெய் ஊற்றி பிளேட் சுற்றி தடவ வேண்டும்.








ஊறிய மாவை பிளேட்டில் தோசை மாதிரி பரப்பி வைக்க வேண்டும்.








Oven-ல 220 F  ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.









Oven ல வைத்து எடுத்த பின்பு  அதன் மேல தக்காளி சாஸ் தடவ வேண்டும்.







தக்காளி சாஸ் மேலே சீஸ் போட வேண்டும்.









சீஸ் மேலே சிக்கன் போட வேண்டும்.









அத்துடன் குடைமிளகாய் ,வெங்காயம் சேர்த்து போட வேண்டும்.








எல்லாம் போட்ட பின்பு 500 F ல 15mins வைத்து  எடுக்க  வேண்டும்.









சுவையான Chicken Pizza ரெடி!












Comments

Popular Posts