முருங்கைக்காய் குழம்பு



தேவையான பொருட்கள்

வெங்காயம்
தக்காளி
முருங்கைக்காய்
கசகசா
தேங்காய்
உப்பு
மஞ்சள்
மிளகாய் பொடி
மல்லி பொடி
சீரக பொடி


செய்முறை






பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.











வெங்காயம் வதக்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும்.











இத்துடன் மல்லி பொடி,மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,உப்பு,சீரக பொடி, முருங்கைக்காய் சேர்த்து மீண்டும் வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.












முருங்கைக்காய் நன்கு வெந்ததும் தேங்காய் கசகசா சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதிவந்ததும்
இறக்கவும்.சுவையான முருங்கைக்காய் குழம்பு ரெடி !










Comments

Popular Posts