அமிர்தமே






















வேகாத வெயிலில்
நீ கொண்டுவரும்  
கருவாடும்
கம்மம் கூழும் அமிர்தமே

பழைய சோறும்
பச்சை மிளகாய்யும்
காரமில்லையடி எனக்கு
எல்லாம் அமிர்தமே

எரியாத விறகில்
கண்ணீர் சிந்தி
ஊதி ஊதி
உன் உயிரின்
பாதியை இழந்துசெய்த
எல்லாம் அமிர்தமே எனக்கு
நீ செய்த எல்லாம்
அமிர்தமே எனக்கு

Comments

Popular Posts