அதனால் சொல்லவில்லை






















என் காதலை இன்னும்
காதலிக்க ஆசை
அதனால் சொல்லவில்லை

எங்கே என்னை
ஏற்க மறுப்பாயோ
என்ற பயமும்கூட
அதனால் சொல்லவில்லை


தூரத்தில் இருந்து
பார்க்கும் இன்பம் கூட
கிடைக்காமல் போய்விடுமோ
என்ற தயக்கம்
அதனால் சொல்லவில்லை

தயக்கங்களே
என் மனதை தாழிட்டு கொள்கிறது
அதனால் சொல்லவில்லை
எனக்குள் இருக்கும் என்காதலை



Comments

Popular Posts