Macaroni


















தேவையான பொருட்கள் 







பாத்திரத்தில் சிறிது தண்ணீரி ஊற்றி மக்கரோனி சேர்த்து வேகவைக்க வேண்டும்.











மக்கரோனி வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.அப்போதுதான் மக்கரோனி ஒன்றோடு ஒன்று சேராமல் உதிரியாய் இருக்கும்.









வெங்காயம்,கேரட்,குடமிளகாய் சிறிதாக வெட்டி வைக்க வேண்டும்.கரம் மசாலா,மிளகாய் பொடி
உப்பு,சர்க்கரை,தக்காளி .













பன்னீரை சிறிதாக  வெட்டி வைக்க வேண்டும்.தேவையான சீஸ்.








செய்முறை






 பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.










அத்துடன் அரைத்த தக்காளி சேர்த்து ,கரம் மசாலா,மிளகாய் பொடி,உப்பு,சர்க்கரை 5 நிமிடத்திற்கு வேக வைத்து அவற்றில் கேரட்,குடைமிளகாய்,பன்னீர் சேர்த்து மீண்டும் 4நிமிடத்திற்கு வேகவைக்க வேண்டும்.








அதிகம் வேக வைக்க வேண்டாம்.காய்கறி குலைய கூடாது .








ஓவனில் வைக்க கூடிய பத்திரத்தின் மேல் aluminium foil போட்டு வைக்கவேண்டும்.










மசாலா கலவையுடன் வேகவைத்த மக்கரோனியை சேர்த்து கிளற வேண்டும்.









Aluminium foil மேல் கிளறிய  கலவையை சேர்த்து பரப்பி அதனை ஓவனில் 400f -10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.









ஓவனில் வைக்கும் முன் தேவையான அளவு சீஸ் போட வேண்டும். வேக வைக்க வேண்டும்.











சீஸ் நல்ல  மக்கரோனி (Macaroni) யோட கலந்துவிட்டது ஓவனை ஆப் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் மக்கரோனி ரப்பர் மாதிரி ஆகிடும் .













சுவையான மக்கரோனி ரெடி!.









Comments

Popular Posts