அந்நிய தேசம்


















நான்  செதுக்கிய
கருவறை சிற்பமே
உன்னை காண முடியாமல்
அழைத்து செல்லுமோ
அந்நிய தேசம்

உன் மழலை சொல் கேளாமல்
பிஞ்சு விரல் தொடாமல்
செல்லமாய் உன்னை கொஞ்ச முடியாமல்

சமுதாய சிக்கலில் பொருளாதாரம் ஈட்ட
பிஞ்சு  மலரே  உனக்காக
அந்நிய தேசம் செல்கிறேன்

உன் அன்னையின் மறுஜென்மத்தில்
அருகில் இல்லாமல்
அந்நிய தேசம் செல்கிறேன்

உன் மேனி பூமீதொடும் நேரத்தில்
அழைத்து செல்லுமோ
அந்நிய தேசம்

பணம் என்ற வார்த்தையில்
மனதை இழந்து
அந்நிய தேசம் செல்கிறேன்

நாட்கள்
வாரங்கள்
மாதங்களாக
எனக்கு  - நீ மகளா????.... மகனா???...
என தெரியாமல்
கண்ணீரால்  கதை எழுதிகிறேன்
என்  டைரியில்!

திருப்பி வரும்வேளையில்
என்னை நினைவிருக்குமா??????......
நான்தான் உன் அப்பா என்று ........

கேள்வி எழும்  வினாக்களுக்கு
விடை தெரியாமல்......








Comments

Post a Comment

Popular Posts