பூந்தி லட்டு











தேவையான பொருட்கள்

கடலை மாவு
சர்க்கரை
ஏலக்காய் பொடி
எண்ணெய்
நெய்
முந்திரி


செய்முறை





கடலை மாவை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்க வேண்டும்.








பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை 3/4-தண்ணீர் ,ஏலக்காய் சேர்த்து கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும்.கம்பி பதம் :(பாகுவை தொட்டு பார்த்தால் ஆள் கட்டி விரல் மற்றும் கட்டை விரலுக்கிடையே நூல் போல் வர வேண்டும்.)








பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ச்ச வேண்டும். எண்ணெய் மிகவும் சூடாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மாவு ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொள்ளும்.







ஓட்டை உள்ள கரண்டியின் வழியாக மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.கரண்டியை ஒரே இடத்தில் வைக்க கூடாது. எண்ணெய் சட்டியை சுற்றி மாவை ஊற்ற வேண்டும்.








எண்ணெயில் இருந்து எடுத்த பூந்தியை சர்க்கரை பாகுவில் போட வேண்டும். பூந்தி சர்க்கரையில் சிறிது நேரம் ஊற வேண்டும்.இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரியை போட வேண்டும்.









சர்க்கரையில் பூந்தி ஊறியதும் கையில் நெய் தடவி கொண்டு  கொஞ்சம் எடுத்து உருண்டை பிடிக்க வேண்டும்.









சுவையான பூந்தி லட்டு ரெடி !

























Comments

Popular Posts